மெட்டா நிறுவனம் 12 ஆயிரம் பணியாளர்களை நீக்குவதற்கு காரணம் என்ன?.  - Seithipunal
Seithipunal


மெட்டா நிறுவனம் தனது பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றும் 12 ஆயிரம் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

இதில் மேலும் ஒரு அதிர்ச்சியாக, இந்த நடவடிக்கையை "குய்ட் லேஆப்"அதாவது, சத்தமில்லாமல் அமைதியான முறையில் பேஸ்புக் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிதியாண்டில் புதிதாக வேலைக்கு ஊழியர்களை எடுப்பதை நிறுத்தி வைத்துள்ள மெட்டா நிறுவனம், தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மெட்டா நிறுவனத்தின் விளம்பர வருவாய் நாளுக்கு நாள் வீழ்சியடைந்து வரும் நிலையில் செலவுகளைக் குறைப்பதற்கான முதல்கட்டமாக செயல்திறன் குறைவாக இருக்கும் ஊழியர்களை கண்டறிந்து அவர்களை பணி நீக்கம் செய்ய மார்க் ஜூக்கர்பெர்க் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்வதற்கான பொறுப்புகள் பல மூத்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், அவர்கள் அமைதியாக  ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. 

இவர்கள், ஊழியர்களின் செயல்திறன்களை மதிப்பிட்டு, சிறப்பாக பணியாற்றாத ஊழியர்களை அடையாளம் கண்டு, பணி நீக்கம் செய்ய நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். சந்தை போட்டி, வருவாயில் வீழ்ச்சி, நிர்வாக சீரமைப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையானது நடைபெறவுள்ளது. 

இந்த வகையில், அடுத்த சில வாரங்களில் சுமார் 12,000 ஊழியர்களை பேஸ்புக் நிறுவனம் வெளியேற்றவுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அந்நிறுவன ஊழியர்கள் தற்போது மிகுந்த ஐயத்தில் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twelve thousand workers remove in meta company


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->