துருக்கி பிரபல பாடகி இயற்கையை எய்தினார். உண்ணாவிரதம் முடிவு பெற்ற சோகம்.!! - Seithipunal
Seithipunal


துருக்கி நாட்டினை சார்ந்த 28 வயதாகும் இளம் பாடகி ஹெலின் பொளக். இவர் நாட்டுப்புற இசைகளை அடிப்படைக்கியாக கொண்டு உருவாக்கப்படும் குரூப் யோரம் பாடல் குழுவை சார்ந்தவர் ஆவார். 

இவர் அரசிற்கு எதிராக புரட்சியான கருத்துக்களை பாடி வந்த நிலையில், இவர்கள் குரூப் யோரம் குழுவை துருக்கி அரசு கடந்த 2016 ஆம் வருடத்தில் தடை செய்தது. மேலும், இந்த குழுவை சார்ந்த நபர்களை கைது செய்தனர். 

இதனை எதிர்த்தும், கைதான நபர்களை விடுதலை செய்ய கூறியும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வந்தது. இதன் காரணமாக ஹெலினின் உடல் நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், மனித உரிமைகள் ஆணையமும் இது குறித்து துருக்கி அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. 

உண்ணாவிரத போராட்டத்தினை நிறுத்தாது தொடர்ந்து மேற்கொண்டு வந்த நிலையில், இவரது கோரிக்கையை பரிசீலனை செய்ய இயலாது என்று துருக்கி அரசு கூறவே, உடல்நிலை மோசமடைந்து கடந்த மார்ச் மாதத்தின் 11 ஆம் தேதியன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து இருந்த நிலையில், சிகிச்சைக்கும் ஒத்துழைக்காததால், நேற்று தனது 288 ஆவது போராட்ட நாளினை முடிவு செய்து இயற்கையை எய்தியுள்ளார். இவரது ரசிகர்களிடையே இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

turkey famous singer died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->