அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவி விலக நெருக்கடி! நாடாளுமன்றம் அதிரடி முடிவு!  - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பதவி நீக்கம் செய்யும்  தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி அனுமதித்தார்.  

அரசியல் எதிரிகளை பழி வாங்குவதற்காக, அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும், உக்ரைன் நாட்டு அதிபருக்கு கடிதம் எழுதியதாகவும் டிரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக நீண்ட நாட்களாக எம்பிக்கள் குழுவில் விசாரணை நடைபெற்ற நிலையில், குற்றச்சாட்டு உண்மை என தெரிய வந்ததால், இன்று  பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி டிரம்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்துக்கு அனுமதி அளித்துள்ளார். 

தன் மீதான தீர்மானத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள டிரம்ப், செனட் சபையில் எதிர் கொள்வதாக அறிவித்துள்ளார். டிரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானம் மேலவையான செனட் சபையிலும் விவாதிக்கப்படும். அங்கு, டிரம்பின் கட்சியான குடியரசு கட்சிக்கு அதிக பலம் என்பதால், அங்கு தீர்மானம் தோல்வி அடையும் என்பதால், டிரம்ப் பதவிக்கு இப்போது ஆபத்து இல்லை என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trump face the new problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->