இந்தியா மற்றும் சீனா மீது கடும் கோபத்தில் டிரம்ப்..! இது தான் காரணமா.? - Seithipunal
Seithipunal


இந்தியாவையும் சீனாவையும் இன்னும் வளரும் நாடுகளாக கருதுவதா என்று உலக வர்த்தக கழகத்திற்கு கேள்வி எழுப்பியுள்ள அதிபர் டிரம்ப், இரு நாடுகளும் அமெரிக்காவை மோசடி செய்து கொள்ளையடிப்பதாக ஆவேசப்பட்டு பேசியிருக்கிறார்.

உலக வர்த்தக கழகத்தின் வகைப்பாட்டின்படி இந்தியாவும், சீனாவும் வளரும் நாடுகள் ஆகும். இந்த வகைப்பாட்டில் வருவதால், வளர்ந்த நாடுகளுடனான வர்த்தகத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நன்மைகள் இருக்கிறது.

இந்த நிலையில், இந்தியாவையும் சீனாவையும் வளரும் நாடுகளாக கருதக்கூடாது என்று உலக வர்த்தக கழகத்திற்கு தமது நிர்வாகம் கடிதம் எழுதியிருப்பதாக டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவும் சீனாவும் அமெரிக்காவை கொள்ளையடிப்பதால் அவற்றை வளரும் நாடுகளாக தாங்கள் கருதவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். சீனாவும், அமெரிக்காவும் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், சீன இறக்குமதிகள் மீது அமெரிக்கா வரி விதிப்புகளை பல மடங்கு அதிகப்படுத்தியுள்ளது.

இதேபோல, இந்தியாவிற்கான சிறப்பு வர்த்தக அந்தஸ்தை ரத்து செய்த டிரம்ப், அமெரிக்க ஏற்றுமதிகள் மீது இந்தியா மிக அதிகமாக வரி விதிப்பதாக தொடர்ந்து குறைகூறி வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trump angry with india and china


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->