பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சானிட்டரி நாப்கின் மீதான வரியை குறைத்தது இலங்கை அரசு.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு, எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் அவற்றின் விலையும் அதிக அளவு உயர்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடியின் மத்தியில் பெண்களுக்கு உதவும் நோக்கில் இலங்கை அரசு, சானிட்டரி நாப்கின் மீதான வரிகளை குறைத்துள்ளது. 

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சானிட்டரி நாப்கின்கள் தயாரிப்புக்காக வெளிநாடுகளில் இருந்து மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் நிலையில், ஐந்து மூலப்பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை ரத்து செய்ய இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டு, இறக்குமதி செய்யப்படும் சானிட்டரி நாப்கின்களுக்கும் வரிச்சலுகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. 

இதனால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 10 சானிட்டரி நாப்கின்கள் கொண்ட ஒரு பேக்கின் விலை 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை குறைக்கப்பட்டு, ஒரு பேக்கின் அதிகபட்ச விலை ரூ.260 முதல் ரூ.270 ஆக இருக்கும். 

மேலும் பொருளாதார நெருக்கடியால் சுகாதாரப் பொருட்களை வாங்க முடியாத பெண்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Sri Lankan government reduced the tax on sanitary napkins


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->