ரஷ்யாவுடன் இணையபோகும் உக்ரைன் பகுதிகள்! மக்களின் ஆதரவை பெற்றாரா புதின்! - Seithipunal
Seithipunal


அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாடாளுமன்றத்தில் செப். 30ம் தேதி வெளியிடுவாரா?

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் படையெடுத்து வருகிறது. இந்த படையெடுப்பில் கைப்பற்றப்பட்ட பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான அதிகாரப்பூர்வ வாக்கெடுப்பு நடத்தப்படும் என விளாதிமீர் புதீன் அறிவித்திருந்தார். இந்த வாக்கெடுப்பானது கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

இந்த வாக்கெடுப்பு ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள லூஹான்ஸ்க், கெர்சன், ஸபோரிஷியா மற்றும் டொனாட்ஸ்கில் ஆகிய மாகாணங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. "ரஷ்யாவுடன் இணைய விருப்பமா" என்ற கேள்விக்கு "ஆம்" அல்லது "இல்லை" என்ற பதிலை தேர்ந்தெடுப்பதற்கான இந்த பொது வாக்கெடுப்பில் ரஷ்யாவுக்கு ஆதரவாக முடிவுகள் வெளியாகும் என்று மேற்கத்திய நாடுகள் விமர்சித்துள்ளன. அதே போன்று ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்து 97 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக ரஷ்ய தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

ரஷ்ய நாடாளுமன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமை ( செப்.30)  ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதீன் இரு அவைகளிலும் உரையாற்ற உள்ளார். அப்பொழுது உக்ரைன் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சிறப்பு ராணு நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது ரஷ்ய தொடுத்துள்ள தாக்குதலில் ரஷ்யப்படை பின்னடைவை சந்தித்து வருகிறது. இதனால்  ரஷ்ய அரசு மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். தற்பொழுது வெளியாக உள்ள பொது வாக்கெடுப்பின் முடிவினால் மக்கள் ரஷ்ய அதிபரை ஆதரிக்கலாம் என கருதப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The parts of Ukraine that will join Russia Did Putin get the support of the people


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->