ஐநா பொதுச் செயலாளர் வெளியிட்ட வாழ்த்து செய்தி! - Seithipunal
Seithipunal


அமைதி, மரியாதை மற்றும் அத்தியாவசிய கண்ணியம்!

இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட மகாத்மா காந்தியின் பிறந்த நாளான இன்று புது டெல்லி அமைந்துள்ள காந்தி நினைவிடத்தில் பிரார்த்தனைகள் சேவைகள் மற்றும் அஞ்சலிகள் ஆகியவை நடத்தப்பட உள்ளன. 

உலகத் தலைவர்களும் பலர் காந்தி ஜெயந்தி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். காந்தி பிறந்த தினத்தை சர்வதேச அகிம்சை தினமாகவும் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள ஐநா சபையின் தலைமையகத்திலும் சர்வதேச அகிம்சை தினம் கொண்டாடப்பட்டது.

இதுகுறித்து ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் "சர்வதேச அகிம்சை தினத்தில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம். அத்துடன் அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்படும் மகாத்மா காந்தி காட்டிய அமைதி மரியாதை மற்றும் அத்தியாவசிய கண்ணியத்தை மதிப்புகளையும் கொண்டாடுகிறோம். இவற்றை உள்வாங்கி கலாச்சாரங்களையும் கடந்து செயல்படுவதன் மூலம் இன்றைய சவால்களை நாம் முறியடிக்க முடியும்" என பதிவிட்டுள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The message released by the UN general secretary


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->