இனிதான் எங்களின் ஆட்டம் ஆரம்பம்..! தலிபான் தீவிரவாதிகள் பகீர் அறிவிப்பு..!! பேரதிர்ச்சியில் உலக நாடுகள்..!! - Seithipunal
Seithipunal


நாம் வாழும் உலகம் முழுவதும் பயங்கரவாதிகள் குறித்த அச்சுறுத்தல் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. ஏனெனில் பயங்கரவாதத்தை பின்பற்றி மக்களைத் தொடர்ந்து கொன்று குவித்து வருகின்றனர். இதனால் உலக நாடுகள் முழுவதும் பெரும் அச்சத்தில் இருந்து வரும் நிலையில்., பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பலர் தங்கள் இன்னுயிரை இழந்து வருகின்றனர். 

மேலும்., நாட்டின் எல்லைகளை கைப்பற்ற அதிக அளவில் நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்கள்., பெரும் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. உலகிலுள்ள ஐஎஸ் பயங்கரவாதிகள் மற்றும் தலிபான் போன்ற அவர்களின் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் இருந்து மக்கள் கடுமையாக துன்பப்பட்டு வரும் நிலையில்., இதனை தடுப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

trump, trump with Afghanistan president, டிரம்ப், அமெரிக்க பிரதமர் டிரம்ப்,

அந்தந்த நாட்டின் ராணுவம் மற்றும் பிற அரசு அமைப்புகளை தொடர்ந்து ஊக்கப்படுத்தி மக்களை பாதுகாத்து வரும் நிலையில்., பேச்சுவார்த்தை மூலமாகவும் பயங்கரவாதிகளின் தவிர்க்கவும் அந்தந்த நாடுகள் முடிவு செய்து தேவையான நடவடிக்கை செய்துள்ளனர். இந்த முயற்சியில்.. அவர் ஆயுதமேந்திய போராட்டத்தை கைவிட கூறி பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்று வந்துள்ளது. 

மேலும்., ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்., ஆப்கானிஸ்தான் நாட்டின் கோரிக்கையை அடுத்து அமெரிக்காவும் தனது படைகளை ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு அனுப்பி வைத்து., பயங்கரவாதிகளை கொன்று குவித்து வருகிறது. மேலும் பல முறை ரகசிய பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்து தோல்வியை தழுவியதாகவும் கூறப்படுகிறது. 

gun, gun firing, waiting for gun shot,

இந்த நிலையில்., ஆப்கானிஸ்தான் தலைநகரில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பின்னணியில் தாலிபன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது என்பது தெரியவந்த நிலையில்., ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்., தலிபான் இயக்கத் தலைவர்களுடன் நடத்தவிருந்த அமைதிப் பேச்சுவார்த்தை ரத்து செய்து அறிவித்திருந்தார். 

இந்த விஷயம் குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது., பயங்கரவாத தாலிபான் தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில்., ஆப்கானிஸ்தான் நாட்டில் தாக்குதல் நடைபெற்றது. மேலும்., ஆப்கானிஸ்தான் அதிபருடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டு இருந்தது. 

இந்த முக்கியமான பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில்., தாலிபான் தீவிரவாதிகள் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் இந்த உடன்படிக்கையில் இருந்து தாமாக முன் வந்து விலகி விடுவதாகவும்., பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றலாம் என்று எண்ணியிருந்த வேளையில்., உடன்படிக்கையை மீறியதன் விளைவாக அவர்களது தகுதியை இழந்து விட்டனர் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

டிரம்ப், அமெரிக்க பிரதமர் டிரம்ப், president of america, america president, trump, Donald trump,

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதலில்., அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடடதக்கது. இந்த சம்பவத்தின் மூலமாகவே அமெரிக்க அதிபர் டிரம்ப்., தலிபான் இயக்க தலைவருடன் மேற்கொள்ளவிருந்த ரகசிய பேச்சுவார்த்தையை இரத்து செய்து அறிவித்திருந்த நிலையில்., தற்போது தலிபான்கள் இதற்கு பதில் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து தலிபான்கள் தெரிவித்தாவது., டொனால்ட் ட்ரம்பின் இந்த முடிவானது அமெரிக்க நாட்டிற்கு அதிகளவிலான இழப்பை ஏற்படுத்தும் என்றும், நம்பகத்தன்மையை பாதிக்கும் என்றும்., இந்த அமைதிக்கு எதிரான நிலைப்பாடு உலகிற்கு விரைவில் தெரியவரும் என்றும்., இனிதான் உயிரிழப்புகளும் பிற இழப்புகளும் அதிகரிக்கும் என்றும் தலிபான் இயக்க செய்தி தொடர்பாளன் ஸாபிஹுல்லா முஜாஹித் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thalipan told about american president cancel program


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->