இலங்கையில் மீண்டும் தாக்குதல் அபாயம்.! தேவாலயங்கள் மற்றும் பள்ளிகளில் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கடந்த 21–ந் தேதி  ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்தவர்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாடினார்கள்.  ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில்  உள்ள கொழும்பு கொச்சிக்கடை கிறிஸ்தவ தேவாலயத்திலும் நீர்கொழும்புவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திலும்  சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றது. அப்பொழுது அங்கு திடீர் குண்டுவெடிப்பு  நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து, அடுத்த சில நிமிடங்களில் கொழும்பு நகரில் தி ஷாங்கரிலா, சின்னமன் கிராண்ட், தி கிங்க்ஸ் பெரி ஆகிய 3 ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும், கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சீயோன் தேவாலயத்திலும் குண்டுகள் வெடித்தன.

 

அதில் இதுவரை மொத்தம் 300 க்கும் அதிகமான பேர் பலியானர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

உலகையே அதிர வைத்த இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னரும், இலங்கையில் தொடர்ந்து அமைதியற்ற சூழலே நீடித்து வருகிறது. இந்நிலையில் இலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்களில்  மே 5 ஞாயிறு முதல் கூட்டு பிரார்த்தனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது .

ஆனால் பயங்கரவாதிகள் நடமாட்டம் இன்னும் இருப்பதாகவும் , மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாகவும் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் இலங்கை முழுவதும் கத்தோலிக்க தேவாலயங்களில் ஞாயிற்றுகிழமை தோறும் நடக்கும் வழிபாடுகள் ரத்து செய்யப்படுவதாகவும்,  இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது. மேலும் மறுஉத்தரவு வரும்வரை இந்த கூட்டங்களை ரத்து செய்ய கார்டினல் ரஞ்சித் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குண்டுவெடிப்பை தொடர்ந்து மூடப்பட்ட கத்தோலிக்க பள்ளிகள் மீண்டும் 6 ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது அந்த இடத்தில் பள்ளிகளை திறக்க வேண்டாம் என பள்ளி முதல்வர்களுக்கு கத்தோலிக்கத் திருச்சபை அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

terrorist attack fear again start in srilnka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->