தலைதெறிக்க ஓடும் தாலிபான்கள்., பள்ளத்தாக்கில் கொத்துக்கொத்தாக சுட்டுக்கொலை.! - Seithipunal
Seithipunal


அத்துமீறி ஆப்கானிஸ்தானில் நுழைந்த தலிபான் தீவிரவாதிகள் அந்நாட்டை பிடித்துள்ளனர். தற்போது ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயத்தில் அவர்களுக்கு ஆப்கானிஸ்தான் நாட்டின் வடகிழக்கு மாகாணமான பஞ்சஷேர் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

அன்மையில் பஞ்சஷேரியில் தாலிபான்களுக்கும் போராளிகளுக்கும் நடைபெற்ற மோதலில் 600 தாலிபான்கள் கொல்லப்பட்டதாக போராளி குழு தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பஞ்சஷேரில் உள்ள போராளிக் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் அளித்துள்ள பேட்டியில்,

"பல்வேறு மாவட்டங்களில் காலையிலிருந்து நடைபெறும் மோதலில் 600 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாலிபான்கள் பிடிபட்டுள்ளனர். மேலும், தாலிபான்களுக்கு நாட்டின் மற்ற பகுதிகளில் பொருள்கள் கிடைப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது" என்று அந்த போராளிக் குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்
.
இதற்கிடையே, மொத்த ஆப்கனிஸ்தான் நாட்டையும் கைப்பற்றியதாக மார்தட்டி கொள்ளும் தாலிபான்களால், நாட்டின் பஞ்சஷேர் பள்ளத்தாக்கு பகுதியை கைப்பற்ற முடியாமல் தவிர்ப்பதற்கு, அந்தப் பகுதியில் நிறைய கண்ணிவெடிகள் இருப்பது தான் காரணம் என்று பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், தலைநகர் பஜராக் மற்றும் ஆளுநர் மாளிகைக்குச் செல்லும் பாதைகளில் கண்ணிவெடி வைத்திருப்பதால் நாங்கள் முன்னேற முடியாமல் தவிப்பதாக ஏற்கனவே தாலிபான் வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளன.

தற்போது தலிபான்களை எதிர்த்து  தளபதி அகமது ஷா மசூத்தின் மகன் அகமது மசூத், முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே ஆகியோரின் தலைமையில் தேசிய எதிர்ப்பு முன்னணி போராடி வருகின்றனர். இவர்களுக்கு 'போராளி குழு' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த போராளிக் குழு காரணமாக தாலிபான்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Taliban struggle


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->