வயிற்றுவலியில் அலறி துடித்த சிறுவன், மருத்துவனையில் கண்டறிந்த உண்மை., திடுக்கிட்ட பெற்றோர்.! - Seithipunal
Seithipunal


சீனாவில் உள்ள நகரில் வசித்து வரும் சிறுவனிற்கு கடுமையான வயிற்று வலியானது ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்து சிறுவனின் பெற்றோர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்., சிறுவனிற்கு வயிற்று வலி சரியாக மாத்திரைகளை வழங்கியுள்ளனர். 

சிறுவன் மாத்திரையை சாப்பிட்டும் சிறுவனிற்கு வயிற்று வலி குறையாததால் சிறுவன் அலறி துடித்துள்ளான். இதனையடுத்து அங்குள்ள பெரிய மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்து சென்றுள்ளனர். 

இதனையடுத்து மருத்துவமனையில் மருத்துவர்கள் சிறுவனை பரிசோதனை செய்த நிலையில்., சிறுவனின் வயிற்று எக்ஸ்ரேயில் காந்த குண்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும்., காந்த குண்டுகள் கொத்து கொத்தாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். 

மேலும்., இது குறித்து சிறுவனிடம் கேட்ட சமயத்தில் சிறுவன் விளையாட்டு பொருளில் இருப்பதை உண்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சுமார் 3 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் 60 க்கும் மேற்பட்ட காந்த குண்டுகளை எடுத்துள்ளனர். தற்போது சிறுவன் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stomach ache in china


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->