நியூயார்க்கில் கடும் பனிப்பொழிவு.! அதிபர் ஜோ பைடன் அவசரநிலை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் பல மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் மாகாணத்தில் வரலாறு காணாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் கடந்த வார இறுதியில் சாலை மூடல்கள் மற்றும் விமானங்கள் ரத்து ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் நியூயார்க் மாகாணம் முழுவதும் பலத்த காற்றுடன் பனி கொட்டி வருகிறது. இதில் எரி நகரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 24 மணி நேரத்தில் 180 செ.மீ. பனிப்பொழிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சாலைகள், வீடுகள், வாகனங்கள் பனிப்போர்வையக காட்சியளிக்கின்றன. இதனால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் குவிந்துள்ள பனியை அப்புறப்படுத்தப்படும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் கடுமையான பனிப்பொழிவை உள்ள நியூயார்க் மாகாணத்தில் அதிபர் ஜோ பைடன் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். மேலும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கட்டராகுஸ், சௌடௌகுவா, எரி, ஜெனிசி, ஜெபர்சன், லூயிஸ், நயாகரா, ஒனிடா, ஓஸ்வேகோ, செயின்ட் லாரன்ஸ் மற்றும் வயோமிங் ஆகிய மாவட்டங்களுக்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

State of emergency declared in New York due to heavy snowfall


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->