தொடர் குண்டுவெடிப்புக்கும்  விடுதலைப்புலிகளுக்கும்  தொடர்பு? -இலங்கை அரசாங்கம் வெளியிட்ட அதிரடி தகவல்  - Seithipunal
Seithipunal


இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு சர்வதேச தீவிரவாத அமைப்புகளே காரணமென ஜனாதிபதியின் ஆலோசகர் மற்றும் ஒருங்கிணைப்புச் செயலாளர் சிரால் லக்திலக தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள ​அவர், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இருக்க வாய்ப்பு இல்லை. இறுதி யுத்தக் காலத்தில் கூட கோவில், மசூதி, தேவாலயம் போன்ற வழிபட்டு தளங்கள் மீது இதுபோன்ற தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு நைஜீரியாவிலும், 2018ஆம் ஆண்டு பாகிஸ்தானிலும் கிறிஸ்தவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களைப் போல, இந்த தாக்குதலும் இருக்கின்றன. எனவே இந்த தாக்குதலின் பின்னணியில் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகள் இருக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

English Summary

srilanka tell about prabhakaran


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal