இலங்கையில் அடுத்த துயரம்! கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள்! மீண்டும் குண்டுவெடிப்பு!  - Seithipunal
Seithipunal


நேற்று இலங்கையில் தலைநகர் கொழும்புவில் உள்ள தேவாலயங்களிலும் மற்றும் நட்சத்திர விடுதிகளிலும் அடுத்தடுத்து நடைபெற்ற தற்கொலைப்படை குண்டுவெடிப்பு தாக்குதலில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளார்கள் என்றும், 450 கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் அந்நாட்டு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தெரியாத நிலையில் இதுவரை 27 நபர்களை அந்த நாட்டு அரசாங்கம் கைது செய்துள்ளது. மேலும் உள்ளூர் இஸ்லாமிய வாய்ப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாகவும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. 

இந்நிலையில் நேற்று வதந்திகள் பரவாமல் தடுக்க மக்கள் பீதியடையாமால் இருக்க  சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டன. அதேபோன்று நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு இன்று காலை விளக்கி கொண்ட இலங்கை அரசு அவசரநிலைப் பிரகடனத்தை செய்தது. மேலும் இன்று இரவு 8 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு  உத்தரவினை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. 

இதனிடையே கொழும்பு பேருந்து நிலையத்தில் 87 டெட்டனேட்டர்களை அரசு பேருந்தில் போலீசார் கைப்பற்றியுள்ளார்கள். இதற்கு அடுத்தபடியாக  கொழும்பில் புனித அந்தோனியார் தேவாலயத்தின் அருகே நின்று கொண்டிருந்த வேனில் சோதனையிட்டபோது அதில் இருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. வெடிகுண்டை கைப்பற்றி செயலிழக்க வைக்கும் பணியின் போது வெடித்து சிதறியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வெடிகுண்டுகள் தொடர்ச்சியாக வெடித்து வருவதால் இலங்கை மக்கள் தொடர்ந்து பீதியில் இருந்து வருகிறார்கள்.  

English Summary

srilanka 9th bomb blast in colombo


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal