தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து இலங்கை அரசு விதித்த தடை..!! மக்களிடையே அமோக வரவேற்பு..!! - Seithipunal
Seithipunal


இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் இதுவரை  253 பேர் பலியாகியுள்ளனர் 500-க்கும் மேற்பட்டோர் ப்டுகாயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கு அவ்வப்போது தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து இலங்கை ராணுவமும், போலீஸ் படைகளும் பயங்கரவாதிகளை மிக  தீவிரமாக தேடி வருகிறார்கள். மேலும் வாகனங்களில் தொடர் சோதனை நடத்தப்பட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுகின்றன. இலங்கை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கபட்டு வருகிறது 

இந்த கொடூர சம்பவத்தையடுத்து தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் ஆகிய இரு அமைப்புகளும் அவசரகால சட்டத்தின் கீழ் தடை செய்யப்படுவதாகவும், அந்த அமைப்புகளின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்படுவதாகவும்  இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா அறிவித்தார்.

இந்நிலையில் இலங்கையில் மேற்கொண்டு தாக்குதல்களை தடுக்கும் விதமாக மற்றொரு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிக்காப் முக திரைகள், மாஸ்குகள், புர்காக்கள் போன்றவை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு  மக்களை எளிமையாக அடையாளம் காணவும், பாதுகாப்பு கருதியும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அதிபரின்அதிகார்வப்பூர்வ  ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri Lankan government imposed a series of bombings Welcome to the people


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->