#BREAKING | இலங்கை அரசியலில் மீண்டும் பரபரப்பு - சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


இலங்கை அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் திடீர் ஜனாதிபதி தேர்தல் நடத்த அதிபர் ரணில் விக்ரமசிங்கே தயாராகி வருவதாக, அந்த பரபரப்பு தகவல் ஒன்று சற்று முன்பு வெளியாகி உள்ளது.

இலங்கையில் எதிர்க்கட்சி தற்போது பலவீனமாக உள்ளதால், அந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்கே முடிவு செய்துள்ளதாகவும் வெளியான அந்த தகவல் தெரிவிக்கின்றது.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையில் அடுத்தடுத்து அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

தற்போது இலங்கையின் எதிர்க்கட்சி மற்றும் ஆளு கட்சியின் ஆதரவுடன் இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே இருந்து வருகிறார். அதே சமயத்தில் இலங்கையை பொறுத்த வரை பலமான ஒரு எதிர்க்கட்சி இல்லை என்பது, அந்நாட்டின் அரசியலில் பல திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.

இதனை பயன்படுத்திக் கொள்ள நினைத்த அதிபர் ரணில் விக்ரமசிங்கே, விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 

இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த வாரம் ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கு உண்டான ஆலோசனையை மேற்கொண்டுள்ளார். 

தேர்தலில் மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கே நிறுத்தப்படுவார் என்றும், அந்தப் போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் இலங்கையில் ஜனாதிபதியாக பொறுப்பேற்று எதிர்க்கட்சிகளை வலிமையான ஒரு எதிர்காட்சியாக திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 

அதே சமயத்தில் ராஜபக்சே அணியினருக்கு புதிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்பட வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி கொடுத்தால் மீண்டும் மக்கள் புரட்சி தானே நடக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri Lanka Political cries noc2022


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->