வெளிநாட்டுக்கு சென்ற 85 பேரை கைது செய்த இலங்கை கடற்படை.! - Seithipunal
Seithipunal


இலங்கை கடற்படையை சேர்ந்த ரணவிக்ரமா என்ற கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தநிலையில், மீன்பிடி படகு ஒன்று சட்டவிரோதமாக சிலரை ஏற்றி கொண்டு பட்டிகலோவா பகுதியில் சென்று கொண்டிருந்தது. 

இதை பார்த்த கடற்படை அதிகாரிகள் மீன்பிடி படகை தடுத்து நிறுத்தினர். அந்த படகில் 85 பேர் பயணித்துள்ளனர். அவர்களில் 60 பேர் ஆண்கள். 14 பேர் பெண்கள் மற்றும் 11 பேர் குழந்தைகள் ஆவர். 

இலங்கை கற்படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பட்டிகலோவா, திரிகோணமலை, முத்தூர், கிளிநொச்சி, ஜாப்னா மற்றும் மது உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. சட்டவிரோதமான கடல் பயணத்திற்காக மீன்பிடி படகை இலங்கை கடற்படை கைப்பற்றியது. 

வெளிநாட்டிற்கு சட்டவிரோத வகையில் செல்ல முயன்றதற்காக 85 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்கள் அனைவரும் திரிகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, திரிகோணமலை துறைமுக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதேபோன்று முகத்துவாரம் பீச் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற 5 பேரையும் இலங்கை கடற்படை போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு   கைது செய்துள்ளது. அவர்களுக்கு, மீன்பிடி படகில் கைது செய்த 85 பேரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri Lanka Navy arrested 85 people


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->