பிரதமரின் மனைவிக்கு கரோனா பாதிப்பு.. மிரட்டும் கரோனா.!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸின் தாக்கத்திற்கு உலகம் முழுவதிலும் பலி எண்ணிக்கை ஐந்தாயிரத்தை நெருங்கியுள்ளது. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது.

இதனால் மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்து வந்து நிலையில், ஸ்பெயின் நாட்டில் கரோனா வைரஸின் தாக்கத்திற்கு 193 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இதனால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஸ்பெயின் நாட்டின் சமத்துவ மந்திரி ஐரீன் மன்டெரோவிற்கு கரோனா தொற்று இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. இதனால் இவர் கணவருடன் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டு கண்காணிப்பின் கீழ் இருக்கிறார். இந்நிலையில், ஸ்பெயின் நாட்டின் பிரதமரான பெட்ரோ சான்ச்செஸ் மனைவி மரியா பெகோனாவிற்கு (வயது 45) கரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Spain President wife Marina isolated due to corona virus infection


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->