திரைப்படத்தை மிஞ்சும் சேசிங்.. சைகையில் கண்ணீரை ஏற்படுத்திய போதைப்பொருள் கடத்தல் தொழிலாளர்கள்..! - Seithipunal
Seithipunal


ஸ்பெயினில் திரைப்படக் காட்சியை போல, நடுக்கடலில் போதை கடத்தல் கும்பல் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளது. இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. 

ஸ்பெயின் நாட்டில் உள்ள தென்கிழக்கு கடல் பகுதியான கார்டகேனா (Cartegana) பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடலோர காவல் படையினர் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளனர். 

இதன்போது சந்தேகத்திற்கு இடமான படகை கவனிக்கவே, அவர்களுக்கு ஒலிபெருக்கி மூலமாக சோதனைக்கு உள்ளாக்க அறிவுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகளை கண்டதும் படகின் வேகத்தை கொள்ளைக்கும்பல் அதிகரித்துள்ளது. 

இதனையடுத்து சுதாரித்த கடலோர காவல் படையினர், அவர்களை விடாமல் துரத்திச் சென்றுள்ளனர். மேலும், போதைப்பொருள் கடத்தல் கும்பல் போதை பொருட்களை கடலில் வீசவும் செய்தது. அந்த படகையை சுற்றி வளைத்து, படகில் இருந்த 5 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். 

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இந்த போதைப்பொருள் மொரோக்காவில் இருந்து கடத்தி வரப்பட்டு, ஸ்பெயினில் உள்ள வளென்சியா (Valencia) பகுதிக்கு கொண்டு செல்ல முயன்றது தெரிய வந்துள்ளது.

இது குறித்த வீடியோ காட்சியில், கடத்தலில் படகை ஓட்டிச்செல்லும் நபர் அதிகாரிகளுக்கு கைகளை அசைத்து சமிக்கை காண்பித்து தங்களை விட்டுவிடும் படி கேட்டுக்கொள்கிறார். அந்த வீடியோவில், குழந்தைகளின் சாப்பாட்டிற்கு என்ன செய்வது?. குழந்தைகள் உள்ளார்கள். அவர்களின் சாப்பாட்டிற்கு என்ன செய்வது நாங்கள்? எங்களை விட்டுவிடுங்கள் என்பதை கூற வருவது போல சைகையில் கூறி, இறுதியில் கையெடுத்து கும்பிட்டு சல்யூட் வைத்து செலுத்துகிறார். 

போதைப்பொருள் உபயோகம் மற்றும் கடத்தலுக்கு உதவி செய்தல் குற்றம் என்றாலும், அந்த குற்றத்தில் ஏற்படும் மூன்றாம் கட்ட தொழிலாளர்களே இதில் சிக்குகின்றனர். இவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்யும் பெரும் கருப்பு முதலைகள் வீதியில் நல்ல அடையாளத்துடன் வளம் வருவது தான் உலகளாவிய சோகம். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Spain Drug Smuggling Gang Workers Request to Officers about Baby Food Money


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->