சத்தமே இல்லாமல் சித்து வேளையில் மீண்டும் வடகொரியா.. பதறும் தென்கொரியா..!! - Seithipunal
Seithipunal


தென்கொரிய நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது குறித்து தென்கொரியா தெரிவித்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தென்கொரியா தெரிவித்த சமயத்தில், 

வடகொரியா நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நகரமான மன்சோண்ணில் இருக்கும் கடல் பகுதியில், காலை 7 மணியின் போது ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை சோதனை சுமார் 150 கிமீ பயணம் செய்து நீரில் விழுந்துள்ளது. 

சீன நாட்டில் இருந்து பரவ துவங்கிய கரோனா வைரஸின் தாக்கமானது 210 நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், வடகொரியாவில் எந்த விதமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது தொடர்பான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

வடகொரியாவுக்கு அண்டை நாடாக இருக்கும் தென்கொரியா நாட்டில் 10,564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 222 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், கடந்த மாதத்தின் 21 ஆம் தேதியின் போதே வடகொரியா குறுகிய தொலைவு ஏவுகணையை சோதனை செய்திருந்தது. இந்த ஏவுகணை சோதனை தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொருளாதார தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

South Korea test rocket


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->