இளம்பெண்கள் எடுத்த பகீர் முடிவால் அல்லாடும் ஆண்கள்... இது என்னடா ஆண்களுக்கு வந்த சோதனை..! - Seithipunal
Seithipunal


ற்போதைய காலகட்டத்தில் திருமணம் என்பது கலாச்சாரம், பண்பாடுகளை தாண்டி புதுமையான முறையில் நடைபெற்று வருகிறது. அதாவது விமானத்தில் திருமணம் செய்து கொள்வது, நடுக்கடலில் திருமணம் செய்து கொள்வது, ஆகாயத்தில் பறக்கும் போதே திருமணம் செய்து கொள்வது என்று திருமணத்தில் புதுமைகளை படைத்து வருகிறார்கள். இன்னும் சிலரும் திருமணம் ஆகாத ஏக்கத்தில் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்

அந்தவகையில் தென்கொரிய நாட்டை சேர்ந்த பெண்கள் திருமணம் செய்து கொள்வதை விட, தனிமையில் வாழ்வதே மகிழ்ச்சி அளிக்கிறது என்பதற்காக திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிள் ஆகவே வாழ்ந்து வருகிறார்கள். இதன் காரணமாக தென்கொரிய நாட்டில் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து விட்டது என்ற அதிர்ச்சி தரக்கூடிய தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் அவர்கள், எதற்காக திருமணம் செய்துகொண்டு கணவன், குழந்தைகள் என்று கஷ்டப்பட வேண்டும் தனிமையில் பிடித்ததை செய்து கொண்டு பிடித்தவாறு வாழ்வதே சந்தோஷத்தை அளிக்கிறது என்று தென் கொரிய பெண்கள் கருதுகிறார்கள். இதன் காரணமாக அந்நாட்டில் பல பெண்கள் இவ்வாறு திருமண பந்தத்தில் ஈடுபடாமல் வாழ்ந்து வருவதால் நாட்டில் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம் போன்ற காரணங்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 'நோ மேரேஜ்' என்ற இயக்கம் ஒன்று தென்கொரியாவில் இயங்கி வருகிறது. இந்த இயக்கத்தை இரண்டு பெண்கள்தான் முதலில் அறிமுகம் செய்திருக்கிறார்கள். தற்போது இந்த இயக்கத்தில் 37 ஆயிரம் பெண்கள் இணைந்திருக்கிறார்கள் என்று தகவல் கூறுகிறது.

இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமானது திருமணம், செக்ஸ், குழந்தை உள்ளிட்டவைகளை எதிர்ப்பதுதான். மேலும் இவர்களின் இந்த பிரச்சாரம் பல இளம்பெண்களை ஈர்த்து வருகிறது. இதன் காரணமாக அந்த பெண்கள் திருமணத்திற்கும், குழந்தை பெறுவதற்கும் மறுப்பு தெரிவித்து வருவதால் அந்த நாட்டில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உலக அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

மேலும், இது குறித்து தென்கொரியா நடத்திய ஆய்வில் நூற்றில் 44 பெண்களுக்கு மட்டும் தான் திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு கணவனுடன் வாழவேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக தெரிகிறது. மேலும் தென்கொரிய பெண்களின் இந்த முடிவு காரணமாக அந்நாட்டில் ஆண்கள் பலரும் திருமணம் செய்து கொள்ள முடியாமல் அலைந்து, திரிந்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

south korea girls says no to marriage


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->