கொரோனா பாதிப்பு முடிந்து வீட்டிற்கு சென்ற 50 பேருக்கு கரோனா மீண்டும் உறுதி.. அதிர்ச்சியில் மருத்துவர்கள்.! - Seithipunal
Seithipunal


தென்கொரிய நாட்டின் மிகப்பெரிய நகரத்தில் ஒன்றாக இருப்பது டாயிகு. இந்த நகரம் கரோனா வைரஸின் தாக்கம் காரணமாக அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நகரில் உள்ள மருத்துவமனையில், கரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்ட 51 பேர் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். 

இவர்கள் அனைவரும் குணமடைந்துவிட்டதாக வீட்டிற்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இவர்களை மீண்டும் தனிமைப்படுத்தி மேற்கொண்ட சோதனையில் கரோனா உறுதியாகியுள்ளது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து மீண்டும் இவர்கள் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக மருத்துவர்கள் தெரிவித்த சமயத்தில், மிகவும் வியக்கவைக்கும் விஷயமாக இது இருக்கிறது. 

நமது உடலில் பல்லாயிரம் கோடிக்கணக்கான செல்கள் இருக்கும் நிலையில், இதில் எதோ ஒரு செல்லில் கரோனா பிரியாத அளவிற்கு ஒட்டிக்கொண்டுள்ளது. இது குணமடைந்த நபர்களை மீண்டும் தாக்குவதற்கு அதிகளவு வாய்ப்புள்ளது. என்று தெரிவித்தனர். மேலும், இந்த கூற்றை ஏற்க மறுத்த இங்கிலாந்து ஈஸ்ட் ஆங்கிலியா பல்கலைக்கழக பேராசிரியர் பரிசோதனை தவறாக மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என்றும், ஒருமுறை கொரோனா பதில் இருந்து மீண்டுவிட்டால், மீண்டும் கொரோனா தாக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

south Korea 50 case positive once again corona after full treatment finished


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->