கம்முனு இருந்த சிங்கத்தை சீண்டிய தென்கொரியா.. ஒரேயொரு பாமில் பதறவைத்த வடகொரியா.!! - Seithipunal
Seithipunal


வடகொரியா மற்றும் தென்கொரியா நாட்டிற்கிடையே கடந்த சில வருடமாக அமைதியான சூழல் ஏற்பட்டு வந்த நிலையில், மோதல் அதிகரிக்க துவங்கியுள்ளது. கடந்த 2018 ஆம் வருடத்தில் வடகொரியாவின் தலைவர் கிம் ஜான் அன் மற்றும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் ஆகிய இருவரும் இருநாட்டு எல்லையில் அமைந்துள்ள இராணுவ விலக்கு பகுதியில் சந்தித்து பேசினர். 

இந்த நேரத்தில், இரண்டு நாட்டு எல்லை பகுதியில் இராணுவ நடவடிக்கையை நிறுத்தி வைப்பது மற்றும் அரசு, தலைவர்கள் விமர்சனம் தொடர்பான பிரசுரங்கள் எல்லையில் வீசுவது போன்ற செயல்களை தடுப்பது தொடர்பான பல ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்த சூழ்நிலையில், வடகொரியாவின் தலைவரான கிம் ஜாங் அன்னையும், அவரது ஆட்சியையும் விமர்சனம் செய்யும் பொருட்டு தென்கொரியாவில் இருந்து ஹீலியம் பலூன்கள் பார்க்கவே, வடகொரியாவிற்கு இது கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன்பின்னர் தென்கொரியா ஒப்பந்தத்தை மீறிவிட்டது என்று கூறி, இதற்கு பதிலடி தரும் வகையில் எல்லையில் இருக்கும் இருநாட்டு தொடர்பு அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்து தகர்த்து தள்ளியது. இதனால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த பிரச்சனைக்கு பேசி தீர்வு காணலாம் என்று கூறி தென்கொரியா சிறப்பு தூதரை வடகொரியவிற்கு அனுப்புவதாக தெரியப்படுத்திய நிலையில், வடகொரியா இந்த வேண்டுகோளை நிராகரித்தது. மேலும், சிறப்பு தூதர் நிராகரிப்பை கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோ ஜோங் நிராகரித்ததாக தெரியவருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

South and North Korea war changes


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->