கினியாவில் அதிகாரத்தை கைப்பற்றியது இராணுவம்..! - Seithipunal
Seithipunal


மேற்கு ஆப்ரிக்காவில் இருக்கும் கினியா நாடு, பிரான்ஸ் நாட்டிடம் இருந்து கடந்த 1958 ஆம் வருடம் விடுதலை அடைந்தது. கடந்த 2010 ஆம் வருடம் ஜனநாயக முறைப்படி நடைபெற்ற தேர்தலில் ஆல்பா காண்டே வெற்றியடைந்து அதிபராக பொறுப்பேற்றார். கடந்த தேர்தலிலும் அவர் அமோக வெற்றிபெற்று, 3 ஆவது முறையாக அதிபராக பொறுப்பேற்று பணியாற்றி வந்தார். 

ஆனால், அவருக்கு தற்போது எதிர்ப்பு வலுக்க தொடங்கியது. ஆல்பா அதிபராக பதவியேற்றத்தை தொடர்ந்து அலுமினிய தாது பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சியடைந்து இருந்தது. இந்த விவகாரத்தால் கினியா மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக தெரியவருகிறது. 

நேற்று அதிகாலை கினியாவின் தலைநகர் கோனாக்ரியில் உள்ள அதிபர் மாளிகை அருகே துப்பாக்கி சூடு சத்தம் கேட்ட நிலையில், அரசு தொலைக்காட்சியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த இராணுவ கர்னல் மமாடி டம்பொயா அதிபர் தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டது என அறிவித்தார்.  

மேலும், இது தொடர்பாக பேசிய இராணுவ கர்னல், " அரசை தனி நபரிடம் ஒப்படைக்க இனியும் நாங்கள் விருப்பவில்லை. அரசை இனி மக்கள் வழிநடத்தட்டும். நாட்டினை காப்பாற்ற வேண்டியது இராணுவ வீரரின் கடமை " என்று தெரிவித்தார். 

இந்த விஷயத்திற்கு ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், " துப்பாக்கியின் பலத்தை வைத்து அதிகாரம் கைப்பற்றும் செயலினை வன்மையாக கண்டிக்கிறேன் " என்று தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

South Africa Guinea Army Take Over Govt Power


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->