ரஞ்சிதா பிரச்சனையின் போது புரியவில்லை... இப்போதுதான் புரிகிறது.. நித்தி விஷயத்தில் நெட்டிசன்கள் பகீர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த நித்யானந்தா பெங்களூரை அடுத்துள்ள பிடதி பகுதியில் நித்தியானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வந்தார். இவரின் சொற்பழிவை கேட்ட கோடான கோடி பக்தர்கள் மற்றும் பக்தைகள் ஆதரவு பெருகவே., இவரின் கிளைகளும் இந்தியா முழுவதும் செயல்பட துவங்கியது.இவருக்கு இந்தியாவில் உள்ள பக்தர்கள் மற்றும் பக்தைகளை போலவே வெளிநாட்டு ஆதரவும் பெருகியது. 

இவரது செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது என்று எண்ணியிருந்த நிலையில்., பகீரென நடிகை ரஞ்சிதாவுடன் குதூகலமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வீடியோ உண்மை இல்லை என்று இன்று வரை இரட்டை கால்களில் அமர்ந்து சமாளித்து வரும் நிலையில்., அவ்வப்போது பல சர்ச்சை பேச்சுகளும் பேசி இணையதள நெட்டிசன்களிடம் குட்டு வாங்கி சென்றார். இவரை ஒரு குணசித்திர காமடி நடிகராக இணையத்தளத்தில் உருவாக்கி நெட்டிசன்கள் விளையாடி வந்த நிலையில்., பெரும் அதிர்ச்சியாக குழந்தை கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை புகார்கள் எழத்துவங்கியது.

nithyanandha, nithyanandha kailaasaa,

இது தொடர்பாக புகார்கள் அடுத்தடுத்து தொடர்ந்து எழவே., காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். அனைவருக்கும் டிமிக்கி கொடுத்து அவ்வப்போது இணையத்தளம் மூலமாக சீடர்களிடையே உரையாற்றி வந்த நிலையில்., ஈகுவாடார் நாட்டில் இருக்கும் தீவிற்கு கைலாசா என்று பெயர் வைத்து., அதனை தனி நாடாக அறிவிக்கும் பணியில் தற்போது தீவிர களப்பணியில் வந்தார். இது தொடர்பாக பல வீடியோ காட்சிகளும் அடுத்தடுத்து வெளியாகி வந்த நிலையில்., ஈகுவடார் நாட்டில் நித்தி இல்லை என்றும்., எங்களது நாட்டின் பெயர் அவதூறாக பரப்பப்பட்டு வருவதாகவும்., அவர் ஹைதி என்ற தீவிற்கு தப்பி சென்றுள்ளார் என்றும் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியானது. 

nithyanandha, nithyanandha kailaasaa,

தனது நாட்டினை அதிகாரபூர்வ நாடாக அறிவிக்க ஐநாவிற்க்கு 40 பக்க கடிதம் எழுதியுள்ள நித்தி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்த கடிதத்தில்., தனது நாட்டில் 11 விதமான பாலின சேர்க்கைகளை அரசு அமல்படுத்த உள்ளதாகவும்., ஓரின சேர்க்கை போன்ற குற்றங்கள் பிற நாடுகளில் குற்றமாக கருதப்பட்டு வரும் நிலையில்., தனது நாட்டில் ஓரின சேர்க்கை போன்ற இயற்கைக்கு மாறான தாம்பத்தியம் போன்றவை அங்கீகரிக்கப்பட்டு., பாலியல் ரீதியிலான குற்றங்கள் நடைபெறாமல் பார்த்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், தன்னால் ஏதும் இயலாது என்று ரஞ்சிதா பிரச்சனையின் போதே கூறும் போது உண்மை தெரியவில்லை... இப்போதுதான் புரிவதாக நெட்டிசன்கள் விமர்சனம் கூறி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

social media users speech about nithyanandha activities


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->