அணு ஆயுத குவிப்பு விவகாரத்தில், உலக நாடுகளுக்கு அதிர்ச்சி தந்த SIPRI ஆய்வறிக்கை.! - Seithipunal
Seithipunal


சுவீடனில் இருக்கும் ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறுவனமான எஸ்.ஐ.பி.ஆர்.ஐ (SIPRI) பல நாடுகளில் அணு ஆயுத குவிப்பு தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளது. SIPRI 2021 என்ற தலைப்பின் கீழ் வெளியாகியுள்ள புத்தகம் உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

இது தொடர்பான அறிக்கையில், " உலகளவில் 9 நாடுகள் அணு ஆயுதத்தை வைத்துள்ளது. அணு ஆயுதத்தை அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் வைத்துள்ளது.

உலகளவில் குவிக்கப்பட்டு இருக்கும் அணு ஆயுதத்தின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 80 ஆகும். இவையில் 90 விழுக்காடுக்கும் மேல் அணு ஆயுதங்கள் இரண்டு வல்லரசு நாடான அமெரிக்கா மற்றும் ரஷியாவில் உள்ளது. 

கடந்த வருடத்தின் ஜனவரி மாத நிலவரப்படி சீனாவிடம் 320 அணு ஆயுதமும், பாகிஸ்தானிடம் 160 அணு ஆயுதமும், இந்தியாவிடம் 150 அணு ஆயுதமும் இருந்தது. சீனா அணு ஆயுதத்தின் நவீனமயக்கமாக்கல் மற்றும் அதனை அதிகளவு குவிப்பது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. 

இந்தியாவும் - பாகிஸ்தானும் அணு ஆயுதத்தின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. உலகளவில் அதிகமாக ரஷியாவில் 6,375 அணு ஆயுதங்கள் உள்ளது. அமெரிக்காவிடம் 5,800 அணு ஆயுதங்கள் உள்ளது. இங்கிலாந்தில் 225, பிரான்சில் 290, இஸ்ரேலில் 90, வடகொரியாவிடம் 40 - 50 அணு ஆயுதங்கள் உள்ளது.

பிரான்ஸ், சீனா, ரஷியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் அல்லது பிரிக்கப்பட்ட புளுட்டோனியத்தை அணு ஆயுதத்தில் பயன்படுத்தி வருகிறது. இந்தியா - பாக்கிஸ்தான் ஏவுகணை சோதனை குறித்து அறிக்கை வெளியிட்டாலும், அவற்றில் அணு ஆயுதத்தின் அளவு பற்றிய தகவல் இருப்பதில்லை.

13 ஆயிரத்து 80 அணு ஆயுதத்தில் 2 ஆயிரம் அணு குண்டுகள் அதிகளவு செயல்பட்டு எச்சரிக்கையுடன் இருக்கிறது. சவூதி அரேபியா, இந்தியா, எகிப்து, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய 5 நாடுகள் 2016 - 2020 ஆம் வருடத்தில் அணு ஆயுத இறக்குமதி அதிகளவு செய்துள்ளது. சவூதி அரேபியா உலகளவில் அதிகபட்சமாக 11 விழுக்காடும், இந்தியா 9.5 விழுக்காடும் இறக்குமதி செய்துள்ளது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SIPRI Report about Nuclear Weapon Issue 16 June 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->