அடிமை மனநிலை அப்படியே உள்ளது... கொந்தளித்த சிவசேனா.. பரபரப்பு தகவல்.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்க நாட்டின் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் வரும் 24 ஆம் தேதியன்று, தனது மனைவி மெலினியா டிரம்புடன் இந்தியாவிற்கு வருகைதரவுள்ளார். இவர்கள் இருவரும் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி மற்றும் 25 ஆம் தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்த நேரத்தில் புதுடெல்லிக்கு முதலில் வருகை தந்து, பின்னர் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகருக்கு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர், பிரதமர் மோடியுடன் சேர்ந்து பொதுக்கூட்டத்தில் இந்திய மக்களுக்கு உரையாற்றவுள்ளார். 

trump,

இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை அதிகரிக்கும் பயணம் என்ற குறிப்பில், இது தொடர்பான தகவலை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக கடந்த வாரத்தின் போது, இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக பேசிகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ட்ரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பின் போது "மோடி மிகசிறந்த நல்ல மனிதர். இந்தியாவிற்கு செல்லும் நாளை நோக்கி நான் காத்திருக்கிறேன்... இந்த மாத இறுதியில் நான் மற்றும் எனது மனைவி இந்தியாவிற்கு செல்லவுள்ளோம். இந்தியாவுடன் வர்த்தக ரீதியிலான ஒப்பந்தம் கையெழுத்தாகும். இந்த பயணம் எங்களின் மற்றும் இரு நாடுகளின் நட்புறவை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல உதவும் என்று தெரிவித்தார்.

trump, Melanie trump,

இவரது வருகையையொட்டி பல முன்னேற்பாடுகள் செயல்பட்டு வரும் நிலயில், டிரம்ப் பயணம் செய்யும் சாலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும், அகமதாபாத் பகுதியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்திற்கு அருகேயுள்ள குடிசை பகுதியை மறைக்கும் 7 அடி உயர சுவரும் எழுப்பப்பட்டு வருகிறது. 

இது போன்ற விஷயங்களை சிவசேனா கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் " அமெரிக்க ஜனாதிபதியின் வருகைக்கு செய்யும் ஏற்பாடுகள் அனைத்தும் இந்தியர்களின் அடிமை மனநிலையை காட்டுகிறது. ட்ரம்பின் வருகை பேரரசரின் வருகையா?... இந்திய சுதந்திரத்திற்கு முன்னதாக இங்கிலாந்து அரசர் அல்லது ராணி இந்தியா போன்ற அடிமை நாடுகளுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். 

இதுவும் அதுபோலவே உள்ளது. முன்னாள் பிரதமரான இந்திரா காந்தி வறுமையை ஒழிக்க முழக்கமிட்ட நிலையில், இது நீண்ட காலமாகவே ஏளனம் செய்யப்பட்டு வந்தது. மோடி வறுமையை மறைத்து வருகிறார். டிரம்ப் மிகவும் புத்திசாலி. ஆனால் உலகம் முழுவதையும் கவனிப்பவர் அல்ல. வலிமையுடைய அமெரிக்காவின் பிரதிநிதிக்கு உரிய மரியாதையை தர வேண்டும் " என்று சாம்னாவில் கூறப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shiv sena samna tells about trump visits India


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->