ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர் சுட்டுக்கொலை.! - Seithipunal
Seithipunal


ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவரான பிலால் அல்-சூடானி, ஆப்பிரிக்கா நாட்டில் ஐ.எஸ். அமைப்பின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார். அத்துடன் இவர் பல நாடுகளில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவியும் அளித்து வந்துள்ளார். 

இதை அடுத்து, அல்-சுடானியை கண்டுபிடிப்பதற்கு அமெரிக்க நாட்டின் அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி, அல்-சுடானியை தேடும் பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில் அல்-சுடானி சோமாலியா பகுதியில் பதுங்கி இருப்பதாக அமெரிக்க படையினருக்கு தகவல் கிடைத்தது. 

அதன் படி, ராணுவ வீரர்கள் சோமாலியாவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த மலைப் பகுதிக்குள் நுழைந்தனர். அப்போது, அங்கிருந்த பயங்கரவாதிகள் மீது அமெரிக்க வீரர்கள் திடீரென தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பயங்கரவாதிகளும் தாக்குதல் நடத்தினார்கள். 

இதில், சுடானி உள்பட பத்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அமெரிக்க வீரர்கள் தரப்பில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இது குறித்து அமெரிக்க அதிபர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, "அல்-சூடானி ஐ.எஸ். அமைப்பில் சேருவதற்கு முன்பு சோமாலியாவில் அல்-ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி அளித்துள்ளார். 

இந்த செயல் அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் மிக முக்கிய இலக்காக மாறியது. அதனால், சுடானி பதுங்கி இருந்த இடத்தின் மாதிரியை வடிவமைத்து அமெரிக்க வீரர்களுக்கு பல மாதங்கள் பயிற்சி வழங்கப்பட்டது. 

இதன் காரணமாகவே வீரர்கள் மிகத் துல்லியமாக தாக்குதல் நடத்தி அல்-சுடானியை சுட்டுக் கொன்றனர். இந்தத் தாக்குதலில் அமெரிக்க வீரர்களில் ஒருவருக்கு மட்டும் சிறிய காயம் ஏற்பட்டது என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senior IS leader Bilal al Sudani shoot dead in somaliya


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->