கரை ஒதுங்கிய கண்கள் அற்ற வினோத உயிரினம்! வியப்பில் சுற்றுலாப் பயணிகள்!! - Seithipunal
Seithipunal


மெக்சிகோ நாட்டில் இருக்கும் புவேர்ட்டோ வல்லார்டா என்னும் அழகிய கடற்கரை நகருக்கு பல்வேறு நாட்டில் இருந்து சுற்றுலாப்பயணிகளும் வருகை தருவது உண்டு.

இந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள டெஸ்டிலாடெரஸ் கடற்கரையில் கண்கள் இல்லாத வினோத உயிரினம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதனை கண்ட சுற்றுலாப்பயணிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த உயிரினம் கொடிய பற்களுடன் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தது.

மேலும், இதுபோன்ற உயிரினத்தை இதுவரை கண்டதில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து, கடல் மற்றும் வன உயிரின அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். அவர்கள் அந்த உயிரினம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

பசிபிக் கடலின் சூரிய ஒளி புகமுடியாத மிக ஆழமான பகுதியிலிருந்து அந்த உயிரினம் வந்திருக்கலாம் என அவர்கள்  தெரிவித்தனர்.  அத்தையக ஆழத்தில், முழுவதும் இருளாக இருக்கும் பட்சத்தில் அந்த உயிரினத்துக்கு கண்கள் தேவைப்படாமல் இருந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sea living species without eyes


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->