சின்ன வயதிலேயே சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடியா?.. அலட்சியம் கூடாது.. தூக்கிவாரி போட்ட ஆய்வின் முடிவுகள்.!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள பெரும்பாலானோருக்கு இளம் நரை பிரச்சனை இருக்கும் நிலையில், இது இயல்பானது என்ற பலரும் மெத்தனமாக இருந்து வந்த நிலையில், அதிர்ச்சி தகவல் ஆய்வின் முடிவில் வெளியாகியுள்ளது. 

மனிதனின் இறப்பிற்கு முக்கிய காரணமாக இருக்கும் நோய்களில் இதய நோய்க்கென தனியொரு முக்கியத்துவம் இருக்கும் நிலையில், இதயத்தை தாக்கும் கரோனரி என்ற பிரச்சனை மூலமாக உடல் உறுப்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கொண்டு செல்லும் அமைப்பு தடைபடுகிறது. இதனால் ஆக்சிஜனும் குறைவாக கிடைத்து உடல் பாதிக்கப்படும் நிலையில், இதய நோயின் அறிகுறியாக இளநரைகள் இருக்கலாம் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 வயதிற்கு அதிகமாக இருக்கும் ஆண்களின் வழுக்கை மற்றும் இளநரை பிரச்சனை இருந்தால், இதய நோயின் அபாயகட்டம் அதிகரிக்கலாம் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐரோப்பிய இதயவியல் சங்கத்தின் மூலமாக நடத்தப்பட்ட ஆய்வில் 545 ஆண்களிடம் சோதனை செய்துள்ளனர். 

இவர்களின் இளநரையை கருப்பு, வெள்ளை, சாம்பல் என்ற மூன்று வகையாக பிரித்த நிலையில், 80 விழுக்காடு நபர்களுக்கு இதய பாதிப்பு இருப்பதும் உறுதியானது. இதனால் இளநரை பிரச்சனையை அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salt and pepper, hair at an early age is dangerous


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->