16 பீரங்கிகள் புடைசூழ காதலை வெளிப்படுத்திய இராணுவ வீரர்.. கலக்கலான வீடியோ காட்சிகள்..!! - Seithipunal
Seithipunal


கடந்த வெள்ளிக்கிழமையானது உலகம் முழுவதும் காதலர்கள் தினமானது கொண்டாடப்பட்டது. இந்த நாளில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தாங்கள் விரும்பும் உறவுகளிடம் தங்களின் அன்பையும், பாசத்தையும் தெரிவித்து வந்தனர்.  

பெரும்பாலான காதலர்கள் தங்களின் துணைக்கு ரோஜாப்பூவை வாங்கி தங்களின் அன்பை வெளிப்படுத்திய நிலையில், பலரும் பலவிதமான முறையில் தங்களின் காதல் அன்பை பரிமாறிக்கொண்டு கொண்டாடி மகிழ்ந்து வந்தனர். 

இந்த நிலையில், ரஷிய நாட்டை சார்ந்த இராணுவ வீரர் தனது காதலியிடம் காதலை தெரிவித்த விஷயம் வைரலாகி வருகிறது. ரஷிய நாட்டில் உள்ள அளப்பினோ பகுதியில் உள்ள இராணுவ படைப்பிரிவில் பணியாற்றி வருபவர் டெனிஸ் கென்செவ் (வயது 23). அலெக்ஸாண்ட்ரியா (வயது 19) என்பவர் இவரது தோழி ஆவார். 

இவர் தனது தோழியை காதலித்து வந்த நிலையில், இவர் காதலர் தினத்தன்று தனது காதலை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளார். இதனையயடுத்து தனது காதலியை இராணுவ தளத்திற்கு அழைத்துள்ளார். 

நண்பரின் அழைப்பை ஏற்று இராணுவ தளத்திற்கு அலெக்ஸாண்ட்ரியா வருகை தரவே, காதலியுடைய கண்களை மூடிக்கொண்ட காதலன் இராணுவ தளத்துடைய மையப்பகுதிக்கு அழைத்து சென்று, சக வீரர்களின் உதவியுடன் 16 இராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தியுள்ளார். 

இதனையடுத்து அலெக்ஸாண்ட்ரியாவின் கண்களை திறக்கவே, இதயவடிவில் டேங்கர்கள் சுற்றி நிற்பதை பார்த்து இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகவே, டெனிஸ் தனது கைகளில் பூங்கொத்தை வைத்து தன் காதலை கூறியுள்ளார். இதனையடுத்து காதலனின் கோரிக்கையை ஏற்று தனது காதலை வெளிப்படுத்தியதை அடுத்து, இருவரும் முத்த மழையை பொழிந்து தள்ளினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russian soldier using 16 banger to propose love for his love girl


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->