நீங்க ரவுடின்னா., அப்ப நாங்க யாரு?.! அமெரிக்காவிற்கே மிரட்டல் விடும் ரஷியா.!! - Seithipunal
Seithipunal


 

இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற அமெரிக்காவும் இரசியாவும் ஒன்று சேர்ந்து போரில் ஈடுபட்டாலும்., போர் முடிந்த பின்னர் நீயா? நானா? போட்டியின் காரணமாக பிரிந்தது. இருநாடுகள் பிரிந்த பின்னர் இவர்களுக்கு இருந்த பனிப்போர் துவங்கி ஆயுதங்கள் மற்றும் அணுகுண்டு., ஏவுகணை தயாரிப்பில் மும்மரமாக ஈடுபட துவங்கின. 

இதே நிலையானது நீடித்தால் இருநாடுகளும் பகைமை நாடக மாறி., அதன் விளைவாக போர் ஏற்படும் என்ற காரணத்தால் இரசிய அதிபரான கோர்பசேவ் தனது கோட்பாட்டில் இருந்து கீழிறங்கி., இரு நாடுகளின் இடையே அணு ஆயுத ஏவுகணைகள் தயாரிப்பதை நிறுத்துவது மற்றும் தயாரித்த அணுஆயுதங்களை அளிப்பது என்று ஒப்பந்தம் போட்டன. 

இந்த ஒப்பந்தத்தின் படி இரு நாடுகளும் தங்களிடம் உள்ள பெரும்பாலான ஆயுதங்களை அழித்தும்., அணு ஆயுதங்களின் தயாரிப்புகளை நிறுத்தியும் ஒப்பந்தத்தை கடைபிடித்தன. இந்நிலையில்., அமெரிக்க அதிபர் டிரம்ப் இரசியா அணுஆயுத ஒப்பந்தத்தை மீறிவருவதாகவும்., இதன் காரணமாக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா அதிரடியாக விலகும் என்று தெரிவித்திருந்தார். 

மேலும்., இந்த விஷயம் தீவிரமடையும் வகையில் அமெரிக்காவின் மந்திரி மைக் பாம்பியோ வரும் 60 நாட்களில் இரசியா சில ஏவுகணைகளை அழிக்காவிடில் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவோம் என்று தெரிவித்திருந்தார். இந்த பிரச்சனைக்கு இரசியா அதிபர் புதின் விளக்கமளித்துள்ளார். 

அந்த விளக்கத்தில்., அணுஆயுத ஒப்பந்தத்தை மீறியதாக தொடர்ந்து குற்றசாட்டு சுமத்தி வரும் அமெரிக்காவிடம் ஆதாரம் இல்லை., எங்கள் மீது தவறான குற்றசாட்டை தொடந்து கூறிக்கொண்டே வருகிறது. 

தற்போதுள்ள நிலைமைகளை குற்றசாட்டாக காட்டி., அதிகளவு அணுஆயுதங்களை தயாரிக்க அமெரிக்கா முயல்கிறது., இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட பல நாடுகள்., தடை செய்யப்பட்ட ஆயுதங்களை தயாரித்து வருகிறது. அவர்கள் ஆயுதம் தயாரிக்க வேண்டும் என்று நினைத்தால் நாங்களும் ஆயுதம் தயாரிப்போம்.  

அணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற முயலும் அமெரிக்கா., எங்களின் மீது குற்றம் சுமத்தி வெளியேற முயற்சி செய்கிறது என்று ரசிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். 

English Summary

RUSSIA PRESIDENT ANGRY


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal