அமெரிக்கா - இந்தியாவை பயன்படுத்தி கொள்கிறது... ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சு.! - Seithipunal
Seithipunal


ரஷியாவின் சார்பில் நடைபெற்ற சர்வதேச விவகார கூட்டத்தில், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergey Lavrov) காணொளிக்காட்சி மூலமாக கலந்துகொண்டார். இதன்போது அவர் பேசுகையில், " அனைத்து நாடுகளையும் உள்ளடக்கி, ஒரே மாதிரியான உலகளவிலான ஒழுங்கு செயல்களை நிலைநாட்ட மேற்கு நாடுகள் முயற்சி செய்து வருகிறது. 

இதனை ரஷியா - சீனா சமாளிக்கும். இந்தியா மேற்கத்திய நாடுகளின் ஆக்ரோஷமான மற்றும் மோசமான கொள்கைகளுக்கு பொருளாக இருந்து வருகிறது. இந்தோ - பசுபிக் நாடுகளை கொண்ட குவாட் அமைப்பை ஊக்குவித்து, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் சீனா எதிர்ப்பு விளையாட்டுகளில் இந்தியாவை நுழைக்க முயற்சி செய்கின்றனர்.

இந்தியாவுடன் நெருங்கிய கூட்டாண்மை மற்றும் சலுகை உறவுகளை குறைத்து மதிப்பிட முயற்சி செய்கிறது. இந்த விஷயங்களுக்கு சீனா மற்றும் ரஷியா அடிபணியாது. இந்தோ - பசுபிக் யுக்தி எதிர்ப்பில் ரஷியா உறுதியாக இருக்கிறது. பல துருவ உலக நாடுகளை உருவாக்கும் நோக்கை முறியடித்து, அமெரிக்கா தலைமையில் ஒரு துருவ நாடுகள் அறிமுகப்படுத்தப்படுகிறது " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia External Affair Minister Sergey Lavrov Speech about India America


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->