போர்க்கால அடிப்படையில் நடவடிக்கையை துவங்கும் ரஷியா.. 15 மணிநேரமாக காத்திருக்கும் கரோனா நோயாளிகள்..! - Seithipunal
Seithipunal


வடகொரியா, ரஷியா மற்றும் சீன நாடுகளில் இருக்கும் ஒற்றுமையாக, அந்நாட்டில் எந்த விஷயம் நடைபெற்றாலும் உலகிற்கு தெரியாமலேயே நடைபெற்று வருவதாகவும், கரோனா விஷயத்தில் கூட பல உண்மைகளை மறைக்கப்பட்டுள்ளது என்றும் குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது. 

ரஷிய நாடு சீனாவுடன் சாலைபோக்குவரத்தை கொண்டுள்ள நிழலில், கரோனா வைரஸின் துவக்கத்தை அடுத்து, ரஷியா தனது எல்லைகளை மூடியது. இந்த எல்லைகள் மூடலுக்கு பின்னர் ரஷியா நடந்ததை உலகிற்கு சரிவர கூறவில்லை. இந்த நிலைக்கு உள்ளாகவே கரோனாவின் தாக்கம் இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாடுகளை புரட்டி எடுத்தது. இதன்பின்னர் அமெரிக்காவை கரோனா வைரஸ் கோரத்தின் உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றது. 

தற்போது ரஷியாவில் கரோனாவின் அறிகுறி துவங்கியுள்ள நிலையில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் மஸ்கொ நகரில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவசரநிலை அறிவிக்கப்பட்டது. இதன்பின்னர் தற்போது வரை 15570 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 130 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் அவசர ஊர்தியின் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதி செய்ய அதிக நேரம் பிடிக்கிறது. 

இதனால் அவசர ஊர்திகள் நீண்ட வரிசையில் நின்று கொண்டு இருக்கிறது. மேலும், 15 மணிநேரத்துக்கும் மேலாக அவசர ஊர்தி காத்துகொண்டு இருப்பதாக ஓட்டுநர் தெரிவித்தது பேரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததை இது எடுத்துரைப்பதாக அக்கம் பக்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக ரஷிய அதிபரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்த சமயத்தில், மஸ்கொவில் இருக்கும் மருத்துவமனைகள் கடுமையான சூழலை சந்தித்து வருகிறது. மருத்துவமனைகள் அவசர நிதியில் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், மஸ்கொ நகரின் மேயர் எங்களை தொடர்ந்து தயார்படுத்திவருவதாக தெரிவித்துள்ளார். 

மஸ்கொ நகரில் பெரும் பொருட்செலவில் 10 ஆயிரம் தொழிலாளர்களை கொண்டு மிகப்பெரிய மருத்துவமனை கட்டப்பட்டு வரும் நிலையில், மேலும் 18 மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகிறது. 40 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. வரும் இரண்டு முதல் மூன்று வாரத்தில் கரோனாவின் உச்சக்கட்டம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia corona virus patients wait to admit hospital more than 15 hours


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->