அமெரிக்காவை தொடர்ந்து பெரும் சோகத்தில் ரஷியா, பிரேசில்..!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் அதிதீவிரமாக பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கமானது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளே கொரோனாவிற்க்கான தடுப்பூசி கண்டறியும் பணியை மேற்கொண்டு வருகிறது. தினமும் மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வரும் நிலையில், சமுக இடைவெளி மற்றும் சானிடைசரால் கைகளை சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல், தனிமைப்படுத்தல் போன்றவற்றை முக்கியமானதாக அறிவித்துள்ளனர்.  

சீனாவில் இருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் அமெரிக்கா கடுமையான அளவு பாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பு 6,159,953 ஆக உயர்ந்துள்ளது. பலியான நபர்களின் எண்ணிக்கை 371,006 ஆக உயர்ந்துள்ளது. 2,738,179 பேர் பூரண நலன் பென்றுள்ளனர்.

அமெரிக்காவில் 1,816,820 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் 1,015 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 105,557 ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் 498,440 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் 890 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 28,834 ஆக உயர்ந்துள்ளது. ரஷியாவில் 396,575 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று 181 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,555 ஆக உயர்ந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia and Brazil corona virus outbreak like america


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->