ஆற்றுக்குள் மூழ்கி வேட்டையாடக் காத்திருந்த அரியவகை உயிரினம்.! வியப்பூட்டும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


நீருக்கடியில் மூழ்கியிருந்த 23 அடி நீள அனகோண்டா பாம்பினை மிகவும் நெருக்கத்தில் ஒருவர் படம் பிடித்திருக்கிறார்.

பிரேசிலில் பார்டலோமியோ ((Bartolomeo)) என்னும் நீரடி உயிரின ஆய்வாளர் ஃபார்மோசோ ஆற்றில் ((Formoso River)) ஆய்வில் ஈடுபட்டிருந்த போது கிட்டத்தட்ட 100 கிலோ எடை உடைய அனகோண்டா பாம்பினைக் கண்டார். வேட்டைக்காக பதுங்கியிருந்த அந்தப் பாம்பினை மிகவும் நெருக்கமாக படம் பிடித்தார் பார்டலோமியோ.

அதை வளைத்து வளைத்து படம் பிடிப்பதைக் கண்ட அனகோண்டாவே ஒரு கட்டத்தில் அங்கிருந்து நகர்ந்து சென்றது. கரைப் பகுதியிலும், வனப்பகுதியிலும் அனகோன்டாவை பலரும் நெருக்கமாக படம்பிடித்திருக்கும் நிலையில் நீருக்கடியில் பசியுடன் காத்திருந்த அனகோன்டாவை படம் பிடித்தது திரில்லிங்காக இருந்ததாக பார்டலோமியோ தெரிவித்திருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

river inside snake


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->