இலங்கையில் அவசர நிலை பிரகடனம் நாளையுடன் காலாவதியாகிறது. ரணில் விக்ரமசிங்கே தகவல் .! - Seithipunal
Seithipunal


இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிப்புக்கு  உள்ளான மக்கள் மிகப்பெரும் புரட்சியில் ஈடுபட்டு அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை கைப்பற்றி அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்தனர்.

 பிறகு படிப்படியாக  மக்கள் அந்த கட்டிடங்களில் இருந்து வெளியேறினர். இதன்காரணமாக  ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்தனர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே வெளி நாட்டுக்கு தப்பிச்  சென்றார்.

 இதைத்தொடர்ந்து ,இலங்கையில் கடந்த மாதம் 21-ந் தேதி புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே  தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவருக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தபட்டது . இதனால்  இலங்கையில் அவசர நிலையை பிரகடனப் படுத்துவதாக ரணில் விக்ரம சிங்கே அறிவித்தார். 

மேலும் ,அதிபர் மாளிகை எதிரே காலி முகத்திடலில் இருந்த போராட்டக்காரர்களின் கூடாரங்கள் அகற்றப்பட்ட நிலையில், அங்கிருந்து போராட்டக்காரர்கள் வெளியேறுவதாக  தெரிவித்தனர். 

இதற்கிடையே ரணில் விக்ரமசிங்கே பிறப்பித்த அவசர நிலை நாளையுடன் காலாவதியாகிற நிலையில் அவசர நிலை வாபஸ் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிபர் அலுவலகம் தரப்பில் தெரிவித்துள்ளதாவது  : 

நாட்டின் நிலைமை நிலையான வகையில் இருப்பதால் அரசுக்கு எதிராக போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட அவசரகால சட்டம் நீட்டிக்கப்படாது. இந்த வாரத்தில் அவசர கால சட்டம் காலாவதி யாகும் நிலையில் மீண்டும் அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது. 

அதிபர் ரணில் விக்ரசிங்கே அவசர கால சட்டம் இந்த வார இறுதிக்குள் நீக்கப்படும் என்றும் தற்போது நாடு, நிலையான நிலையில் இருப்பதால் அவசரகால சட்டத்தை நீடிக்க வேண்டிய அவசிய மில்லை என்றும் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ranil Vikramasinge about emergency gatgets


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->