14 ஆண்டுக்கால காதலியை கரம் பிடித்த பிரபல நட்சத்திரம்.! - Seithipunal
Seithipunal


ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால், டென்னிஸ் உலகின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவரான இவர், 14 ஆண்டுக்காலமாக தான் காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்திருக்கிறார்.

டென்னிஸ் உலகில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக விளங்கிவரும் 19 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ரபேல் நடால், ஸிஸ்கா பெரெல்லோ என்பவரை கடந்த 14 ஆண்டுக்காலமாக காதலித்து வந்திருக்கிறார்.

நடால் விளையாடும் பல போட்டிகளையும் நேரில் வந்து ரசிப்பதை ஸிஸ்கா பெரெல்லோ வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் தனது காதலியை நடால் திருமணம் செய்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டில்  உள்ள மல்லோர்கா தீவு பகுதியில் உள்ள கோட்டையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. சுமார் 350 பேர் மட்டும் இவ்விழாவிற்கு அழைக்கப்பட்டதாகவும், ஸ்பெயினின் முன்னாள் மன்னரான ஜூவான் கார்லோஸ் இதில் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rafael nadal married his 14 years love


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->