சுற்றுசூழலை பாதுகாக்க வித்தியாசமான வழியில் போராட்டத்தை கையாண்ட மக்கள்.! - Seithipunal
Seithipunal


மாசுபடிந்து வரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தும் வகையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள கடற்கரை மணலில் பள்ளம்தோண்டி தலையை புதைத்தபடி தன்னார்வலர்கள் போராட்டம் செய்தார்கள்.

காடுகள் அழிப்பு, இயற்கை வளங்கள் சுரண்டல் போன்ற காரணிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி உலகளவில் இளைஞர்கள் போராட்டத்தை கையிலெடுத்து வருகின்றனர். அதற்காக உலகளவில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பல்வேறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அதன் ஒருபகுதியாக, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மேன்லி கடற்கரையில் திரண்ட இயற்கை ஆர்வலர்கள் பள்ளம்தோண்டி தங்கள் தலையை மணலில் புதைத்தப்படி போராட்டம் நடத்தினர். அதேபோல், பிரிஸ்பேன் நகரில் திரண்ட பொதுமக்கள் சாலையில் படுத்தும், டிஸ்கோ நடனம் ஆடியும்  சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தினர்.

இதனால் அங்குள்ள வில்லியம் ஜாலி பிரிட்ஜில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 2025ம் ஆண்டிற்குள் காற்றில் உள்ள கார்பன் அளவை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டுமென்பதே தங்களின் குறிக்கோள் என போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

protest in different method to save environment


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->