ஊரே கொழுந்துவிட்டு எரியும் நிலையில்., மன்னிப்பு கேட்ட பிரதமர்..! - Seithipunal
Seithipunal


காட்டுத் தீயானது ஆஸ்திரேலியாவில் பற்றி எரிந்து வரும் நிலையில், விடுமுறையைக் கழிப்பதற்காக ஹவாய் தீவு சென்றது குறித்து ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிசன் நாடு மக்களிடம் மன்னிப்பு கோரி இருக்கின்றார்.

நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா ஆகிய 3 மாநிலங்களில் கடந்த செப்டம்பர் மாதம் முதலே தீயானது பற்றி எரிந்து வருகின்றது. இவ்வாறு எரியும் காட்டுத் தீயில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களும் நூற்றுக்கணக்கான வீடுகளும் எரிந்து சாம்பலாகி நாசமாகின.

இந்த காட்டுத்தீ காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். தீயணைப்புத்துறையினர், 3 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களும், மீட்புக் குழுவினரும் இணைந்து தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிசன் ஹவாய் தீவில் தன்னுடைய குடும்பத்தினருடன் சேர்ந்து விடுமுறையை கழிக்கச் சென்ற விவகாரம் பொதுமக்கள் மற்றும் உலக நாடுகள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பாதியிலேயே தாயகம் திரும்பிய அவர் தன்னுடைய நாடு மக்களிடம் மன்னிப்பு கேட்டு இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prime minister says sorry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->