புளோரிடாவை புரட்டிப் போட்ட இயான் புயல்.! பிரதமர் மோடி இரங்கல்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவை தாக்கிய மிக சக்திவாய்ந்த இயான் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40க்கு மேல் உயர்ந்துள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி  இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், "இயான் புயலால் ஏற்பட்ட உயிர் இழப்பு மற்றும் அழிவுகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், இதயப்பூர்வமான அனுதாபத்தையும் தெரிவிக்கிறேன். இந்த கடினமான காலங்களில் அமெரிக்க மக்கள் மீது எங்கள் எண்ணங்கள் உள்ளன" என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை மதியம் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் கேயோ கோஸ்டா என்ற கடற்கரை பகுதி அருகே இயான் சூறாவளி புயல் கரையை கடந்தது. இதனால், அப்பகுதியில் மணிக்கு 150 மைல்கள் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. 

புளோரிடாவை புரட்டிச் சென்ற இயான் சூறாவளி புயல், தெற்கு கரோலினா கடற்கரையில் 2-வது முறையாக நேற்று முன்தினம் கரையை கடந்தது. இந்தப் பகுதியில் நீரில் மூழ்கி உயிர் தப்பியவரை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.
 
இந்நிலையில், புளோரிடாவில் சனிக்கிழமை இரவு 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வந்தனர். புளோரிடாவில் மட்டும் புயல் காரணமாக குறைந்தது 66 பேர் உயிரிழந்ததாகவும், வடக்கு கரோலினாவில் புயல் தொடர்பான சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prime minister modi condolance for america death people


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->