இந்தோனிஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… டிக்டர் அளவில் 6ஆக பதிவு…! - Seithipunal
Seithipunal


இந்ததோனேசியாவில் இன்று டிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ள சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் நிலதட்டுகள் அசைவுகள் காரணமாக அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்தோனேசியாவின் டோபெலோவிற்கு வடக்கே 259 கிமீ. மையப்பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 174.3 கிலோமீட்டர் தொலைவில் காலை 5: 17 மணிக்கு  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. யு.எஸ்.ஜி.எஸ் தெரிவிக்கையில், இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் குறித்த தகவல் வெளிவரவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Powerful earthquake in Indonesia


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->