உக்ரைனில் நடைபெறும் வன்முறை மற்றும் உயிரிழப்புகளை நிறுத்த வேண்டும் - போப் வேண்டுகோள் - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் 7 மாதங்களாக தீவிரமாக நடந்து வரும் நிலையில், உக்ரைனில் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கானோர் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

மேலும் இரு நாடுகளுக்கு இடையே அணு ஆயுத போர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், புனித பீட்டர் சதுக்கத்தில் பொதுமக்களிடையே உரையாற்றிய போப் பிரான்சிஸ், உக்ரைனில் தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதல், வன்முறை மற்றும் உயிரிழப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இரு நாடுகளும் அணு ஆயுதப்போரை கைவிட வேண்டும் என்றும், இதற்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திறந்த மனதுடன் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து நாடுகளும் உக்ரைனில் நடைபெறும் துயரங்களை முடிவுக்கு கொண்டு வர தூதரகங்கள் மூலம் முயற்சி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pope urges Putin to stop violence in Ukraine


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->