வரலாற்றில் முதன் முறையாக, கர்ப்பிணி மம்மி கண்டுபிடிப்பு - ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்.!! - Seithipunal
Seithipunal


உலகிலேயே முதல் முறையாக ஆண் என நினைத்த மம்மி, கர்ப்பிணி பெண் மம்மி என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அது உலகின் முதல் கர்ப்பிணி மம்மி என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

எகிப்து நாட்டில் உள்ள பிரம்மீடுகளில் கல்லறைகள் உருவாக்கப்பட்டு, அங்கு வாழ்ந்த மூதாதேயர்கள் இறந்த பின்னர் அங்கு வைக்கப்பட்டனர். தற்போதைய நவீன ஆராய்ச்சிகளில் பல்வேறு விஷயங்கள் கண்டறியப்பட்டு வருகிறது. 

ஆய்வாளர்கள் பிரம்மீடுகளில் மறைந்திருக்கும் பல உண்மைகளை வெளிக்கொணர முயற்சித்து வரும் நிலையில், அவ்வப்போது கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட மனித உடல்களை கண்டறிந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

கடந்த 1826 இல், ஒரு எகிப்திய மம்மி சவப்பெட்டி போலந்திற்கு வந்தது. போலந்து நாட்டில் உள்ள வார்சாவில் அமைந்துள்ள தேசிய அருங்காட்சியகத்திற்கு அது நன்கொடையாக வழங்கப்பட்டது. முதலில் அந்த மம்மியை ஆராய்ச்சி செய்த ஆய்வாளர்கள், அது பெண் மம்மி என கண்டறிந்தனர்.

இருப்பினும், பல ஆண்டுகளுக்குப் பிறகு 1920 களில், பண்டைய எகிப்திய எழுத்து அமைப்பின் ஒரு பகுதியான ஹைரோகிளிஃப்களில் உள்ள சவப்பெட்டியின் கல்வெட்டுகள் மொழிபெயர்க்கப்பட்டபோது, ​​மேற்கூறிய உடல் ஹார்-டிஜெஹூட்டி என்ற ஆண் எகிப்தியர் என்று ஆய்வாளர்கள் முடிவிற்கு வந்தனர். 

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, 2015 ஆம் ஆண்டில், போலந்து ஆராய்ச்சியாளர்கள் குழு, வார்சா மம்மி திட்டம் என்ற பெயரில் ஒரு திட்டத்தைத் தொடங்கியது, அதே அருங்காட்சியகத்தில் 40 க்கும் மேற்பட்ட மம்மிகளை ஆய்வு செய்தது. அந்த ஆய்வுகளின் முடிவியிலேயே இந்த பெண் மம்மி கர்ப்பிணியாக இருந்தவர் என்பது கண்டறியப்பட்டது.

மேலும், அவர் எப்படி மரணத்தை தழுவினார்? என்பது தொடர்பான ஆராய்ச்சி நடந்து வரும் நிலையில், கரு இறக்கும் போது சுமார் 26 மற்றும் 30 வாரங்கள் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த கட்டத்தில், கருவை உடலில் இருந்து அகற்றுவது கடினமாக இருந்திருக்கலாம் அல்லது ஒரு மத காரணம் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Poland Warsaw Museum Discovers Pregnant Mummy Historical first time 8 May 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->