ஒரே வாரத்தில் 200 திமிங்கலங்கள்.! திணறும் அரசு., வெளியாகும் வீடியோ.!! - Seithipunal
Seithipunal


 

நியூசிலாந்து நாட்டில் உள்ள தென்கிழக்கு அருகேயுள்ள ஸ்டீவர்ட் தீவில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர்., சுமார் 145 "பைலட்" இனத்தை சார்ந்த திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியது. இந்த விசயமானது அங்குள்ள மக்களுக்கு தெரியவே., அனைவரும் கவலை அடைந்து உள்ளனர். 

திமிங்கலங்கள் எந்த காரணத்திற்காக இறந்தன என்பது குறித்த ஆய்வுகளில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதே போல் அந்நாட்டில் உள்ள  ஹன்சன் வளைகுடா பகுதியில் சத்தாம் தீவில் உள்ள கரைகளில் சுமார் 90 பைலட் வகை திமிங்கலங்கள் மீண்டும் கரை ஒதுங்க தொடங்கியுள்ளது. 

அவ்வாறு ஒதுங்கிய திமிங்கலங்களில் 51 திமிங்கலங்கள் தற்போது வரை உயிரிழந்துள்ளதாகவும்., சுமார் 39 திமிங்கலகள் மீண்டும் கடலுக்குள் சென்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 

திமிங்கலங்கள் தற்போது வரை எதற்காக நிலத்தில் வந்து உயிரிழக்கின்றன என்பதற்கான சரியான காரணம் தற்போது வரை அறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PILOT WHALES DIED IN NEW ZEALAND SEA SIDE


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->