சீனாவில் நிலநடுக்கம் - அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறும் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் உள்ள சின்ஜியாங் பிராந்தியத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 புள்ளிகளாக பதிவானது. 

இந்த நிலநடுக்கத்தின்போது வீடுகள் மற்றும் கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியதனால், மக்கள் பீதியடைந்து கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். 

இதேபோல், சின்ஜியாங் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் விமானத்திற்காக காத்திருந்த பயணிகள் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வால் அச்சமடைந்த  அங்கிருந்து வெளியே ஓடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன. 

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு, காயம் அல்லது பெரிய அளவில் பொருள் சோதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.

இதேபோன்று, கடந்த 2008-ம் ஆண்டு சின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள சிச்சுவான் மாகாணத்தை 7.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. அந்த நிலநடுக்கத்தில் சுமார் 90,000 பேர் பலியானதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

peoples shelter outside for earthquake in china


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->