வேதியியலுக்கான நோபல் பரிசை வென்ற பால் பெர்க் பிறந்த தினம்.!! - Seithipunal
Seithipunal


பால் பெர்க் :

வேதியியலுக்கான நோபல் பரிசை வென்ற பால் பெர்க் 1926ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளினில் பிறந்தார்.

 நியூக்ளிக் அமிலங்களின் உயிரி வேதியியல் தன்மை குறித்த அடிப்படை ஆராய்ச்சிகள், மறுஇணைவு டி.என்.ஏ தொடர்பான ஆய்வுகளில் வால்டர் கில்பர்ட் மற்றும் ஃபிரெட்ரிக் சாங்கெர் ஆகியோருடன் இணைந்து 1980ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார்.

அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் ஃபேலோ, அமெரிக்க தேசிய அறிவியல் பதக்கம், பயோடெக்னாலஜி ஹெரிடேஜ் விருது என பல விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளார்.

ஒரு உயிரினத்தின் டி.என்.ஏ.வை மற்றொரு உயிரினத்தின் மூலக்கூறில் செலுத்தி பெறப்பட்ட இரண்டு வெவ்வேறு உயிரினங்களின் டி.என்.ஏ.க்கள் அடங்கிய மூலக்கூறை உருவாக்கியவர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

paul berg birthday 2022


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->