திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவில் இன்று அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவில் இன்று காலை 8 மணியளவில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. 

இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடலோரப் பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்பு, பொருட்சேதம் குறித்த எவ்வித தகவலும் வெளிவரவில்லை.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நேற்று காலை 7 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர்  அளவுகோலில் 4.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

papua new guinea earth quake


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->