பச்சை நிறத்தில் மணலா?... அதெப்படி?... படிச்சு பாருங்க...!! - Seithipunal
Seithipunal


பொதுவாக கடல்கள் நீல நிறத்திலும், நீர் உப்புச் சுவையும் கொண்டதாக இருக்கும். கடல் நீர் தெளிவாகவும் காணப்படும். அதுமட்டுமில்லாமல் கடற்கரையில் இருக்கும் மணல் லேசான தங்க நிறத்தில் காணப்படும். ஆனால் ஒரு சில கடல்கள் நம் சிந்தனைக்கும் எட்டாத வகையில் நம்மை ஆச்சரியப்படுத்துமாறு அமைந்துள்ளது.


 
கடல் என்றால் நீர், மணல் நிறைந்த இடம் தானே... இது தவிர வேறு என்ன ஆச்சரியம் இருக்கும் என்ற கேள்வி உங்களுக்கு தோன்றுகிறதல்லவா?

ஆம்... கடலில் நாம் நினைக்க முடியாத வகையில் எண்ணற்ற அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிறைந்து காணப்படுகிறது. அப்படி ஒரு கடற்கரையைப் பற்றிதான் இன்று நாம் தெரிந்து கொள்ளப்போகிறோம்.

எங்கு இருக்கிறது?

ஹவாய் தீவில் அமைந்துள்ள கடற்கரைதான் நம்மை அதிசயக்க வைக்கும் வகையில் காட்சியளிக்கிறது. இக்கடற்கரை பப்பாகோலியா கடற்கரை (Papakolea beach) என அழைக்கப்படுகிறது. இந்த கடற்கரையில் உள்ள மணல்கள் பச்சை நிறத்தில் காணப்படுகிறது.


 
உலகிலேயே பச்சை நிறத்தில் காணப்படும் மணல்களை கொண்ட கடற்கரை இதுதான் என்று கூறப்படுகிறது. இந்த கடலை முதலில் காணும்போது ஏதோ பச்சை பாசிகள் படர்ந்த இடமாக தோற்றமளிக்கிறது. ஆனால், இதன் உண்மையான தோற்றம் பச்சை நிறத்தில் காணப்படும் மணல்கள்தான்.

என்ன காரணம்?

இந்த கடற்கரையில் உள்ள மணல்கள் மட்டும் ஏன் பச்சை நிறத்தில் காணப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து பார்த்ததில் இங்கு அமைந்துள்ள எரிமலையில் இருந்து வெளிவரும் ஒரு வகையான பச்சை நிற கனிமங்கள்தான் இதற்கு காரணம் என்று கூறியுள்ளனர்.

இதனாலேயே இந்த கடற்கரைக்கு பச்சை நிற கடற்கரை எனப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

நாம் என்னதான் செயற்கை முறையில் பல நிகழ்வுகளை செய்தாலும் இயற்கையாக தோன்றும் அதிசயம் மற்றும் ஆச்சரியத்திற்கு எதுவும் ஈடு இணையாகாது என்பதே உண்மை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

papakolea beach in hawaii


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->