தலிபான் அரசை அங்கீகரியுங்கள் - பாக். பிரதமர் இம்ரான் கான் ஐ.நா கூட்டத்தில் பேச்சு.! - Seithipunal
Seithipunal


ஆப்கானில் அமைந்துள்ள தலிபான் தலைமையிலான அரசை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசினார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 20 வருடமாக நடைபெற்று வந்த உள்நாட்டுப்போரில், தலிபான் பயங்கரவாதிகளை எதிர்த்து ஆப்கானிய இராணுவத்திற்கு அமெரிக்காவின் தலைமையிலான கூட்டுப்படைகள் உதவி செய்தது. அமெரிக்காவின் வெளியேற்றத்தை தொடர்ந்து, ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலை கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தானை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். 

இதனைத்தொடர்ந்து, புதிய இடைக்கால அறிவிப்பை தலிபான்கள் கொடுக்க, தலிபான்களின் அரசை உலக நாடுகள் அங்கீகரிக்க மறுத்துவிட்டது. ஐக்கிய நாடுகள் சபையும் எந்த விதமான அறிவிப்பும் வெளியிடவில்லை. உலக அரங்கில் சூழல் வேறு நிலையில் இருக்க, ஆப்கானிஸ்தானில் இருக்கும் பயங்கரவாதிகளுக்கு மறைமுக ஊக்கம், நிதிஉதவி கொடுத்து வந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை காப்பாற்றியதில் இருந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. 

மேலும், தலிபான்கள் அறிவித்துள்ள அரசை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிற்கு பின்னணியில் பாகிஸ்தான் பெரும்பங்கு உதவி செய்திருப்பதாக கூறப்படும் நிலையில், பாகிஸ்தான் தரப்பில் இந்த குற்றசாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் காணொளி வாயிலாக கலந்துகொண்ட பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான் பேசுகையில், " ஆப்கானிஸ்தானில் நிலவும் நெருக்கடியை தவிர்க்க தலிபான் தலைமையிலான அரசை சர்வதேச சமூகம் ஆதரிக்க வேண்டும். சர்வதேச சமூக முன்னேறி செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் சிந்திக்க வேண்டும். நாம் ஆப்கானிஸ்தானை புறக்கணித்தால் அது அந்நாட்டில் உள்ள மக்களுக்கு ஆபத்தாக முடியும். 

ஆப்கானிஸ்தானில் வசித்து வரும் மக்களில் 99 % மக்கள் வறுமை கோட்டிற்கும் கீழ் உள்ளதாக ஏற்கனவே ஐ.நா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடி நமது முன்னால் உள்ளது. இந்த நெருக்கடி அண்டை நாடுகளை மட்டுமல்லாது, அனைத்து இடத்திலும் கடும் விளைவை ஏற்படுத்தலாம். அதனால் தலிபான் அரசை ஆதரிக்க வேண்டும் " என்று பேசினார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan Prime Minister Imran Khan Speech about World Courtiers Approve Afghanistan Taliban Govt in UN Meeting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->